வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் சக்தி அம்மா பிறந்தநாள் விழா. மத்திய அமைச்சர் பங்கேற்பு.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோவிலை நிர்மாணித்த சக்தி அம்மாவின் 46 – வது ஜெயந்தி விழாவில் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விஜயசம்பலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ஜெயந்தி விழா முன்னிட்டு பக்தர்கள் கரகம், படுகர் இன மக்கள் நடனமாடியபடியும் ஊர்வலம் வந்தனர். மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெத்தி ரெட்டி, திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், தங்க கோவில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமரை இயக்குநர் பாலாஜி, பீடமேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!