வேலூரிலிருந்து பம்பைக்கு சபரிமலை சிறப்பு அரசு விரைவுபேரூந்து துவக்கம்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்(எஸ்இடிசி) சார்பில் (கோவை மண்டலம்) சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக வேலூரிலிருந்து பம்பைக்கு நேற்று 12-ம் தேதி பகல் 2 மணிக்கு வேலூர் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்து பின்பு புறப்பட்டு சென்றது.கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், கம்பம், குமுளி, எருமேலி, நிலக்கல்வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பம்பை சென்றடையும்.ஜனவரி மாதம் 16-ம் தேதி வரை வேலூர் – பம்பை இடையே சிறப்பு பேரூந்து இயங்கும். இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூஆயிரத்து 10 ஆகும்.இதேப்போல் பம்பையிலிருந்து வேலூருக்கு மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு வேலூர் பழைய பேருந்துநிலையம் வந்து அடையும். கூடுதல் விவரங்களுக்கு 9445014471 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்துவக்க நிகழ்ச்சியில் சேலம் கோட்ட எஸ்இடிசி மேலாளர் கணேசன், வேலூர் எஸ்இடிசி பணியாளர்கள் ராஜேந்திரன், ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!