வேலூர் காட்பாடியில் நடந்த கூட்டுறவு வாரவிழாவை புறக்கணித்த அனைத்து அதிமுக கூட்டுறவு சங்க தலைவர்கள்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு துறையின் 68 -வது வாரவிழா காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் 17-ம் தேதி நடந்தது.கடந்த முறை அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க தலைவர் பதவியை 90 சதவீதத்திற்கு மேற்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்களே. வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி, பால் கூட்டுறவு சங்கம் (ஆவின்) கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (கற்பகம்) உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் அதிமுகவினரே உள்ளனர்.ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெறும்.ஒரு வாரம் முழுவதும் கூட்டுறவ நடத்தப்படும்.இப்போது திமுக ஆட்சியில் உள்ளது. ஆனால் கூட்டுறவு தலைவர்கள் யாரும் இல்லை.இந்நிலையில் கடந்த 17-ம் தேதி வேலூர் அடுத்த காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் 68 -வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நடந்தது. இதில் அதிமுக தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முதல்முதலில் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்துகொள்ளாத கூட்டுறவு வாரவிழா இதுவே ஆகும்.கூட்டுறவு வாரவிழாவில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.உடன் கைத்தறிதுறை அமைச்சர்காந்தி, மாவட்ட ஆட்சியர்கள் வேலூர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை பாஸ்கரபாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவு துறையினர், திமுகவினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!