வேலூரில் ராட்சத பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்து தாய்,மகள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் காகிதப்பட்பட்டறை சினிமா தியேட்டர் எதிரில் திருமூர்த்தி என்பவரின் வீடு உள்ளது.வேலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.திருமூர்த்தி வீட்டில் பிச்சாண்டி என்பவரின் வீடு மழையால் பாதிப்பு அடைந்து உள்ளதால் பிச்சாண்டி தனது மனைவி ரமணி (42) மகள் நிஷாந்தி (24)யுடன் தற்போது வசித்து வந்தார்.வேலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்று 14-ம் தேதி பிச்சாண்டி கடைக்கு சென்றுவிட்ட நிலையில் ரமணியும், நிஷாந்தியும் வீட்டில் இருந்து உள்ளனர்.அப்போது மலையிருந்து ராட்சத பாறை ஒன்று இவர்கள் இருந்த ஓட்டு வீட்டின் மீது உருண்டு விழுந்தது. இதில் 2 பேரும் சிக்கி கொண்டனர்.தகவல் அறிந்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி.செல்வக்குமார், மாநகராட்சி ஆணையர் சங்கரன், தீயணைப்பு துறை, காவல்துறை, வருவாய்துறையினர் விரைந்து வந்தனர்.இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்தது.ரமணியை சடலமாக மீட்டனர்.ஆனால் இடுபாடு களில் சிக்கிய நிஷாந்தியை மீட்க முடியவில்லை.இதனையெடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாறையை அகற்றி தேடியதில் நிஷாந்தியும் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.தாய்,மகள் உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!