அபாகஸ் போட்டியில் இலத்தூர் காவலரின் மகள் உலக சாதனை; தென்காசி மாவட்ட எஸ்பி பாராட்டு..

அபாகஸ் போட்டியில் இலத்தூர் காவலரின் மகள் உலக சாதனை படைத்தார். ஸ்மார்ட் சாய்ஸ் இந்தியன் அபாகஸ் பிரான்சிஸ் எலைட் உலக சாதனை மற்றும் இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய அபாகஸ் உலகசாதனை போட்டி ஒன்றை ஆன்லைனில் ஜூம் ஆப் மூலம் நடத்தியது. இந்த போட்டியில் இலத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் சக்திவேல் மகள் ஹரிணி பங்கேற்று 12 நிமிடங்களில் நான்கு வரிசைகள் ஒற்றை இலக்க எண் கணித கூட்டுத் தொகைக்கான போட்டியில் 156 எண் கணித விடைகளைக் கூறி உலக சாதனையைப் படைத்தார். உலக சாதனை படைத்த காவலரின் மகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS பாராட்டுக்களை தெரிவித்தார். உலக சாதனை படைத்த மாணவி ஹரிணி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!