வேலூர் மண்டலத்தில் தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

வேலூர் மாவட்டம் வேலூர் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் 1. 11. 2021 முதல் 3. 11. 2021 ஆகிய 3. நாட்களுக்கு பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் வசதிக்காக கீழ்கண்ட ஊர்களிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வேலூரிலிருந்து பெங்களூருக்கு 10. பேருந்துகளும் ஓசூருக்கு 20.பேருந்துகளும் திருச்சிக்கு 10. பேருந்துகளும் தர்மபுரிக்கு 5. பேருந்துகளும் சென்னைக்கு 75 .பேருந்துகளும் இயக்கப்படும் மேலும் பயணிகளின் தேவைக்கு யேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதேபோல் சென்னையிலி ருந்து ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, மற்றும் ஓசூர், மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலி ருந்து இயக்கப்படும் தீபாவளிக்கு பின்னர் O6. 11. 2021 முதல் 08. 11. 2021 வரை ஆகிய நாட்களில் கூடுதலாக திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கு 20. பேருந்துகளும் ஓசூருக்கு, 30. பேருந்துகளும் சென்னைக்கு 100. பேருந்துகளும் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தெரிவித்துக் கொள்கிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!