வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனைரூ 1.94 லட்சம் பறிமுதல்.

வேலூர் வேலப்பாடியில் பத்திரபதிவு துறையின் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கிவருகிறது.இந்த அலுவலகத்தில் நேற்று 30-ம் தேதி மாலை வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி தலைமையில் காவல்துறையினர் திடீரென்று அலுவலகத்தில் நுழைந்து அலுவலக கதவுகளை மூடினர். உள்ளே இருந்த அதிகாரிகள், பொதுமக்கள், புரோக்கர்கள் என யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.ஒவ்வொரு அறைகளிலும் சோதனை செய்தனர். அலுவலக கழிவறை, மேஜை, புரோக்கர்களிடம் மற்றும் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத௹1.94 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இன்று 1-ம் தேதி காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவலதுறையினர்்காட்பாடி அடுத்த தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் கிறிஸ்தியாண்பேட்டையில் உள்ள ஆர்.டி.ஓ.செக்போஸ்டில் சோதனை செய்துவருகின்றனர்.நேற்று தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து, பதிவு துறை, வருவாய்துறையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்து கணக்கில் வராத லட்சணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!