வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாட்சியர்கள் 8 துணை வட்டாட்சியர்களை மாற்றம் செய்து ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.பேர்ணாம்பட்டு சமூகநல தாசில்தாராக பணியாற்றி வந்த வெங்கடேசன் கே.வி.குப்பம் வட்டாட்சியராகவும்இங்கு பணியாற்றிய ராஜேஸ்வரி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சில்லரை விற்பனை உதவி மேலாளராகவும்இங்கு பணியாற்றிய உஷாராணி கே.வி.குப்பம் தாலுகா சமூகநல திட்டவட்டாட்சியராகவும்
இங்கு பணியாற்றிய விநாயகமூர்த்திபேர்ணாம்பட்டு வட்டாட்சியராகவும்இங்கு பணியாற்றிய கோபி வேலூர் வட்டவழங்கல் அலுவலராகவும்அங்கு பணியாற்றிய நெடுமாறன் காட்பாடி சமூகநல திட்டவட்டாட்சியராகவும்
அங்கு பணியாற்றிய ரமேஷ் பேர்ணாம்பட்டு சமூக நலதிட்டவட்டாட்சியராகவும்வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரண்யா காட்பாடி வட்டாட்சியராகவும்இங்கு பணியாற்றிய பாலமுருகன் ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகள் பிரிவு தனி வட்டாட்சியராகவும்அங்கு பணியாற்றிய லலிதா குடியாத்தம் வட்டாட்சியராகவும்அங்கு பணிபுரிந்து வந்த வத்சலா, மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும்ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் கீதா இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கோவில் நிலங்கள் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராகவும்
அங்கு பணியாற்றிய குமார் வேலுர் ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேப்போல் 8 துணை வட்டாட்சியர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









