இன்ஸ்டாகிராமில் காதலித்து மைனர் பெண்ணை கடத்தியஆம்பூர் வாலிபர் போக்சோவில் கைது.

திருப்பதூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்தீபனின் மகன் ராபின் (எ) ரகுபதி (23). இவன் பெங்களூரில் நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்தான்.கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொற்று காரணமாக சொந்த ஊருக்கு வந்த ரகுபதி அங்கு தீவன கடை நடத்திவந்தான்.அப்போது இன்ஸ்டாகிராமில் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.காதலித்து வந்த இருவரும் கடந்த மாதம் மாயமானார்கள்.இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகுபதி தனது பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் கேம் விளையாடி உள்ளான்.இதனை சைபர்கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.இருவரையும் பிடித்து ஆம்பூர் அழைத்து வந்தனர்.மைனர் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ரகுபதியை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!