முன்னாள் அமைச்சர் பெயர் பலகை லாரியுடன் தொடர்ந்து மணல் கடத்தி வந்தஅதிமுக பிரமுகர்மகனுடன் கைது.

திருப்பத்தூர். ஜூன் 28 – திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அங்காரதம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் திருப்பதி.திருப்பதி முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி வீரமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டு அதிமுக ஆட்சியில் அப்போதையை அமைச்சர் கே.சி.வீரமணி பெயர் பலகையை தன்னுடைய லாரியில் எழுதிவைத்து செயற்கை மணல் மற்றும் ஆற்றுமணலை தனது லாரியில் கடத்தி சென்றுவிற்பனை செய்து உள்ளான்.நேற்று முன்தினம் லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி.உத்தரவுப்படி நாட்றம்பள்ளி காவல்துறையினர் மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் அது அனுமதியின்றி எடுத்து வந்தது தெரியவந்தது.மணல் கடத்திய அதிமுக பிரமுகர் திருப்பதி மற்றும் அவனது மகன் ஜெகதீஷ்(17) ஆகியோரை கைது செய்தனர்.திருப்பதியை திருப்பத்தூர் சிறையிலும் மைனரான ஜெகதீசை வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கும் அனுப்பி வைத்தன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!