வேலூர். ஜூன் 22-வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலைப்பகுதியை சேர்ந்த கணவன், மனைவி, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் ஒரே பைக்கில்பேர்ணாம்பட்டு சென்றனர்.
நேற்று பகல் பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகம் எதிரில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.இறந்தவர்களின் விவரம் ராஜா (35) மனைவி காமாட்சி (28) மகன்கள் சரண் (6) விண்ணரசன் (4) ஆகியோர் என்று தெரியவந்தது.தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளைகள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


You must be logged in to post a comment.