நாங்களும் தாதாக்கள் தான்..வனப்பகுதியில் தமிழக – ஆந்திர யானைகள் முட்டிமோதி சண்டை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி எல்லை ஆந்திர மாநில வனப்பகுதியில் அமைந்துள்ளது.இந்த பகுதி ஓசூர் வனப்பகுதியிலிருந்து காட்டுயானைகளும் ஆந்திர பகுதியான சித்தூர், பலமநேரி காட்டுப்பகுதியிலிருந்து யானைகளும் இங்கு வந்து தண்ணீர் குடிப்பதற்கும், வாழை, கரும்புகளை சாப்பிடுவதற்கும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியாத்தம் வனப்பகுதியை மோர்தானா பகுதியில் யானைகள் பிளிரும் சத்தம் கேட்டது.இதுகுறித்து தகவல் அறிந்தவனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது அங்குள்ள வாழை தோட்டம் சூறையாடப்பட்டு இருந்தது.இந்த பகுதியில் தமிழகயானைகளும் ஆந்திர யானைகளும் அடிக்கடி வந்து சண்டைபோடுவதாகவும் அதன்பிறகு யானைகளை பட்டாசு வெடித்து அந்தெந்த பகுதிகளுக்கு கிராம மக்கள் உதவியுடன் விரட்டி அடிப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.மாநில மக்களை போல் நாங்களும் அடிக்கடி போடுவோம். நாங்களும் தாதாக்கள் என்று சொல்லாமல் செய்துகாட்டிவரும் தமிழக மற்றும் ஆந்திர யானைகள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!