பள்ளபட்டி பகுதியில் ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு

தற்போது தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி 24-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை ஒருவாரத்திற்கு தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல்- மதுரை தேசிய நான்கு வழி சாலையில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லை பள்ளபட்டி சோதனைச்சாவடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இதனை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார் மேலும் சோதனைச்சாவடி பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினருக்கு மருத்துவ முகக் கவசங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.மேலும் மாவட்டத்திற்கு உள்ளே வரும்வாகனங்கள் வெளியே செல்லும் வாகனங்களை உரிய ஆவனங்கள்இ-பதிவு மற்றும் உரிய காரணம் இன்றி வரும் வாகனங்களை சோதனை செய்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டுவரும் வாகனங்களை மட்டுமே அனுமதித்து  வருகின்றனர் உரிய ஆவணங்கள் இன்றியும் இப்பதிவு மற்றும் காரணம் இன்றி வரும் வாகனங்களையும்  இருசக்கர வாகனங்களையும் திருப்பி அனுப்பி வருகிறனர்,இந்த பணியில் நிலக்கோட்டை காவல்துறை துணை சூப்பிரண்டு முருகன் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முக லெட்சுமி தலைமையில் மூன்று ஷிப்ட்டுகளாக பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஷிப்ட்டுக்கு 15 காவலர்கள் வீதம் பணி அமர்த்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது உடன் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஜெயகுமார் உள்பட பலர் இருந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!