வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் தாங்கலில் கோவிட்-19
வாகன விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் அப்பகுதி மக்களுக்கு கொடுக்கப்பட்டது. திமுக கிளை செயலாளர் பிஜி சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுகதுணை செயலாளர் தமிழரசி வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ஆலோசனைபடி ஆட்டோவில் கோவிட் குறித்த விழிப்புணர்வு மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது. டீக்காராமன்,ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் துர்கா சங்கர், பஞ்சாட்சரம், தேவேந்திரன், காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.