வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல உதவி ஆணையர் பணியில் மெத்தனமா?

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையராக செந்தில் பணியாற்றிவருகிறார். இவர் அடிக்கடி அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்றும் வீட்டிலே அலுவலக பணி செய்வதாகவும் மற்ற 3 மண்டல உதவி ஆணையர் போல் நேரடியாக பணியை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆணையர் சங்கரன் நடவடிக்கை எடுத்தார். தனது சொந்தகாரில் வந்து அலுவலகம் உதவி ஆணையர், ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி நேற்று சனிக்கிழமை முதல் நீண்ட நாட்களுக்கு பின்பு மண்டல அலுவலகம் வந்தது. அதனுடன் தனது சொந்தகாரும் எடுத்து வந்தார். அதன்பிறகு அரசு ஜீப்பில் சென்று ஊரடங்கைமீறி செயல்பட்ட ஒரு இனிப்பு கடைக்கு போலீசாருடன் இணைந்து ரூ 2000 அபராதம் விதித்தார் உதவி ஆணையர் செந்தில். இனிமேலாவது தனது அரசு பணியை நன்றாக செய்ய வேண்டும் என்பது முதலாவது மண்டல பொதுமக்களின் ஆசை.

கே.எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!