திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்,குரி சிலாப்பட்டு, கொரட்டி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.சுமார் 3 வினாடிகள் இந்த லேசான நில அதிர்வு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் ஒருசில இடங்களில் பீதியுடன் காணப்பட்டனர்.இந்திய புவியியல் மையமும் இதை உறுதிசெய்து உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது மலையின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இப்போது திருப்பத்தூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


You must be logged in to post a comment.