சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை;இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது…

சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை சிவகுருநாதபுரம் சந்தை பஜாரில் வசித்து வரும் சிதம்பரம் மகன் ராமர் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியின் கிழக்குப் புற சுவரின் சுண்ணாம்புக் காரையானது தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. ஓடுகளால் ஆன மாடியின் சம்பாரம் ஒரு பக்கமாக கீழிறங்கி உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் குடியிருந்து வந்தவர் காயமின்றி தப்பினர்..

இதேபோல் இடையர்தவணை வடக்குத்தெருவில் திருமலை என்பவருக்கு சொந்தமான மண் சுவரிலான ஒரு அறை கொண்ட ஒட்டுவீட்டில் மாடசாமி மனைவி கோமதியம்மாள் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீடு தற்போது பெய்து வரும்  தொடர் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் வீட்டில் குடியிருந்தவர்களை மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!