வேலூர் மாவட்டம் சுருங்கியது ..மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி…

வேலூர் மாவட்டம் சுருங்கியது ..மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி.. முதலில் வட ஆற்காடு மாவட்டமாக இருந்து திருவண்ணாமலை பிரிந்தது. பின்பு அம்பேத்கார் மாவட்டமாக உருவானது. ஜாதிப் பெயர் பிரச்னையால் வேலூர் மாவட்டம் ஆனது. அதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் வருவாய் கோட்டம் இருந்தது. வேலூரிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த திருப்பத்தூரை தனி மாவட்டமாக அப்பகுதி மக்கள் கோரீக்கை வைத்தனர். ஆனால் சுதந்திர தினத்தன்று முதல்வர் பழனிச்சாமி திடீரென்று இந்த மாவட்ட்த்தை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என 3 ஆக பிரித்து அறிவித்தார். இதை வேலூர் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய 5 தாலுகா மட்டுமே உண்டு. இந்த சிறப்புமிக்க மாவட்டம் இப்போது சுருங்கி விட்டது. இனிமேல் வேலூர் மாவட்டத்தை வேலூர் மாநகராட்சியாக அறிவித்துவிடலாம். வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வியே இந்த மாவட்ட பிரிப்பு என கூறப்படுகிறது.

கே.எம்.வாரியார்

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!