கந்துவட்டி கும்பல் மிரட்டல், வாலிபர்ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வம். இவரின் மகன் சிரஞ்சீவி (25) தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டை குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்தார்.கொரோனா தொற்று காரணமாக சில மாதங்கள் தவணை பணத்தை கட்ட முடியவில்லை. நிதி நிறுவன ஆட்கள் ஏற்பாட்டில் குண்டர்கள் சிரஞ்சீவியை வீட்டிற்கு வந்து மிரட்டி உள்ளனர். இதனால் மன உளச்சல் அடைந்த சிரஞ்சீவி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கும்பலை கைது செய்யக் கோரி இறந்தவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதாக போலிசார் உறுதி அளித்ததின் பேரில் கலந்து சென்று உடலை தகனம் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!