திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

 தமிழகத்தின் 35வது மாவட்டமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி உதயமானது.இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று திருப்பத்தூர் வனச்சரகர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 14ஏக்கர்,சுமார் 27,376சதுர மீட்டர் பரப்பளவில் 109கோடியே 71லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்குதமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி காணொளி காட்சியின் மூலமாக அடிக்கல் நாட்டினார்.இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

 கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!