தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சார்பில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், துரிஞ்சாபுரம் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் சிலபந்தல் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி .எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 47 ஊராட்சிகளில் உள்ள 9 பூத் கமிட்டிகளாக பிரித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து துறை செயலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர தொண்டர்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும் ,கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருக்கிறார் எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களில் உள்ள உள்ளவர்களை இளைஞர், இளம்பெண்கள் பாசறை, உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் வெங்கடேசன் பாசறை செயலாளர் குணசேகரன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சம்பத், ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் அல்லாபக்ஷி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!