தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நகர காங்கிரஸ் சார்பில் வாசுதேவநல்லூர் கொரோனா நிவாராணம் வழங்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பழனி நாடார் ஆலோசனையின்படி, மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் இராமசாமி ஏற்பாட்டில் மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் N.நாகராஜன் தலைமையில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நிவாரணம் வழங்கப்பட்டது.பேரூராட்சி நிர்வாக அதிகாரி
சுதா,மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் சங்கை கணேசன், வாசுதேவநல்லூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் P.முருகன், மாநில காங்கிரஸ் பேச்சாளர் சோலை S.இராமசாமி, மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் S.மணிகண்டன BE., வட்டார காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் டெல்லிS.கணேசன் ஆகியோர்கள் முன்னிலையில் நலிவடைந்த பொதுமக்கள் சுமார் ஐம்பது நபர்களுக்கு அரிசி பைகள் மாவட்ட காங்கிரஸ் OBC தலைவர் N.திருஞானம் வழங்கினார். வாசுதேவநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் R.செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். வாசுதேவநல்லூர் நகர காங்கிரஸ் உறுப்பினர்கள் சுமார் நூறு பேர்களுக்கு அரிசிப்பைகள் சமூக விலகலை பின்பற்றி அவரவர்கள் வீட்டில் நேரில் சென்று வழங்கப்பட்டது.மேலும் தொடர் கொரோனா ஊரடங்கின் காரணமாக உழைப்பின்றி பசியில் வாடும் ஏழை எளிய தொழிலாளர்களின் பசியை போக்கும் விதமாக மதிமுக தென்காசி மாவட்ட மாணவரணி சார்பாக வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமலாபுரம் கிராமத்தில் சுமார் 50 தூய்மை பணியாளர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.தென்காசி மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன் வழிகட்டுதலின் படியும், ஒன்றிய செயலாளர் S.கிருஷ்ணகுமார் ஒத்துழைப்பின் படியும் குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை,தேங்காய், காய்கறிகள்,மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் கிளை செயலாளர் பொ.மல்லையா தலைமையில் முருகேசன் முன்னிலையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பா.மாரிச்சாமி அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ப.சுப்பிரமணியன், ச.அன்பழகன்,(குட்டை மல்லையா அன்பு தம்பி நா.கணேஷ்குமார்,ரா.அன்பு, வெ.கார்த்திக் , சு,வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.