சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் கொரோனா கால தீவிர வாகன சோதனையின் போது போலி பீடிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தில் போலீஸார்
நடத்திய வாகன சோதனையின் போது ரூ.1லட்சம் மதிப்பில் போலி பீடிகள் சிக்கியது.கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சேர்ந்தமரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு தலைமையில் ஏட்டு பன்னீர் செல்வம் மற்றும் தன்னார்வலர்கள் கொரோனா ஊரடங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக போலீரோ மற்றும் லோடு ஆட்டோவில் வந்த வாகனத்தை மடக்கி சோதனையிட முயற்சித்தனர். அப்போது அந்த வாகனங்கள் நிற்காமல் வேகமாக சென்றது. அதனால் அந்த வாகனங்களை போலீசார் விரட்டி பிடித்தனர். அதில் இருந்த 4 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை செய்ததில் அதில் உணவு பொருட்கள் அவசரம் என ஒட்டப்பட்ட வாகனத்தில் போலி பீடிகளை ஆலங்குளத்திலிருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து ஆலங்குளத்தை சேர்ந்த செல்வராஜ்,(38), சிவகாமியை சேர்ந்த கண்ணன்(40), இரட்டைகுளத்தை சேர்ந்த அருணகிரி (32) ஆகியோரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ 1 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகள், 13 பண்டல் பிரபல கம்பெனி பெயரிலான போலி லேபிள்கள் மற்றும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.