காட்பாடி அருகே கொலை செய்து ஆற்றில் புதைத்த 3 சடலங்கள் தோண்டி எடுப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஹசிங் போர்டு பகுதியில் ஊரடங்கு உத்தரவின் போது கடந்த 19-ம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 3 பேரை சிப்காட் போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அக்ராவரம் பகுதியில் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து தங்க செயினை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் 3 நபர்களை கொலை செய்தது தெரிய வந்தது. அதன்படி இவ்வழக்கு திருவலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது வேலூர் மாவட்டம் காட்பாடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் டிஎஸ்பி துரைப்பாண்டி தனிப்படை அமைத்து விசாரணை வேகமாக முடுக்கிவிடப்பட்டது. கைது செய்யப்பட்ட சீக்க ராஜபுரம் மேட்டூர் யுவராஜ் (26) பல்லவ நகர் வாசு (19) திருவலம்பஸ் நிலையம் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் அரவிந்தன் (19) ஆகியோரை திருவலம்போலீசார் தீவிர விசாரணை செய்த போது இவர்கள் சென்னை திருவெற்றியூர் இளங்கோ மற்றும் 8 பேர் கொண்ட கூட்டணி அமைத்து கொண்டு திருட்டு, வழிப்பறி, பைக் திருட்டு போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதில் சென்கை ஆசிப் முகமது, (25) விழுப்புரம் மாவட்டம் தெளிகிராமம் நவீன் (25) ஆகியோருக்கும் அடிக்கடி பணம் பிரிப்பதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவலம் பகுதியில் பைக் திருடலாம் என்று கூறி ஆசிப்அகமது, நவீன், சூர்யாவை இந்த கும்பல் திருவலம் கம்மராஜபுரம் பனந்தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று இரும்பு ராடால் அடித்து கொலை செய்து ஒரே குழிவில் தோண்டி புதைத்து உள்ளனர். போலீசாரின் தனிப்படை திருவெற்றியூரில் பதுங்கி இருந்த சூர்யா, திருவண்ணாமலை மாவட்டம் கருங்காளியில் இருந்த சூர்யாவின் தம்பி சதீஷ்.அரவிந்தனை கைது செய்தனர்.காட்பாடி தாசில்தார் பாலமுருகன், டிஎஸ்பி துரைப்பாண்டி முன்னிலையில் பிணங்கள் எலும்பு கூடுகளாக தோண்டி எடுக்கப்பட்டு வேலூர் அரக மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.தலைமறைவான ஜெயபிரகாஷ், இளங்கோ, சாது ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!