வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் மீது தாக்குதல் தாயுடன் தர்ணா போராட்டம்.

வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் (கோட்டை வளாகம்) கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 196 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது 5 நாட்களில் இந்த பயிற்சி முடிவு பெற உள்ளது.இங்கு பயிற்சி பெறும் மதுரையை சேர்ந்த பெண் காவலரை பயிற்சி அறையில் தங்கி இருக்கும் பெண் காவலர்களுக் கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மதுரையை சேர்ந்த பயிற்சிகாவலரை லத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் தகவல் அறிந்த அவரது பெற்றோர் நேற்று காவலர் பயிற்சி மையத்திற்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் மகளை தாக்கிய பயிற்சிகாவலர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை புகார் தந்தும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் விசாரணை நடத்தினார்.இப்போதே சிறிய பிரச்னைக்கு அடித்து கொள்கிறவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று பணியாற்றும் போது லஞ்ச பணத்திற்கு எப்படி அடித்து கொள்வார்கள் என்று வேடிக்கை பார்த்த பொதுஜனம் கமெண்ட் அடித்தது.புதிய டிஐஜி காமனி மற்றும் எஸ்.பி. பர்வேஸ் குமார் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார் என்பது பெண் பயிற்சிகாவலர் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கே எம்.வாரியார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!