வேலூர் பழைய ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனை அமைந்துள்ள பழைய ஆற்காடு சாலையில் நேற்று சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்துள்ள தெருவோரக் கடைகள் சிறு வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி கடைகள் கடைகளின் விளம்பர பலகைகள் கடைகளுக்கு முன்னால் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள சிமெண்ட் பூசப்பட்ட தரைகள் டைல்ஸ் பதிக்கப்பட்ட சிலாப்புகள் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மகிழுந்துகள் ஆகியவற்றை நெடுஞ்சாலை துறையினர் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றது இப்பணியினை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இப்பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் மாநகராட்சி அலுவலர்கள் காவல் துறையினர் பங்குபெற்றனர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன் வட்டாட்சியர் செந்தில் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!