வேலூர் மத்திய சிறையில் தொடர்முறைகேடு சோதனையில் ரூ 3 லட்சம் சிக்கியது.

வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக செந்தாமரைக்கண்ணன், வேலூர் சிறை கண்காணிப்பாளராக ருக்மணிபிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.வேலூர் சிறையில் தொடர்முறைகேடுகள் நடப்பதாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.இதனை தொடர்ந்து கோவை சிறைத்துறை டிஐஜிசண்முகசுந்தரம் தலைமையில் கடந்த 2 தினங்களாக 70 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.ஆண்கள் சிறைக்கு எதிரே உதவி ஜெயிலர் அலுவலகங்கள் உள்ளன. அதில் ஒரு அறையை தனிநபர் புரோக்கராக செயல்பட்டு அட்டகாசம் செய்துவருவது குறித்து கோவை டிஐஜி அந்த அறையை சோதனை செய்தபோது ரூ 3 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.பெரிய அதிகாரி முதல் சிறிய அதிகாரிகள் வரை லஞ்சத்தில் புரள்வதாக தகவல் வெளி ஆகி உள்ளது.வேலூர் மத்திய சிறையில் விரைவில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!