காட்பாடி ரயில்நிலைய தண்டவாள ரயில்பெட்டி கீழ் சிக்கிய குழந்தை – தாய் உயிருடன் மீட்ட ரயில்வே காவல்துறை.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்தில் நேற்று 11-ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் பிளாட்பாரத்தில் 8 – மாத ஆண் குழந்தையுடன் ஒரு பெண் நடந்துவரும் போது கால் இடறி ரயில் தண்டவாளத்தில் விழுந்த அவர் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து உள்ளார்.அப்போது எர்ணாகுளத்திலிருந்து பிளாஸ்பூர் செல்லும் பயணிகள் வந்துள்ளது.இதில் குழந்தையும், தாயும் சிக்கி கொண்டனர். மயக்கமடைந்த அவரால் எழுந்திருக்க முடியவில்லை. குழந்தைக்கு காயம் ஏற்படவில்லை.காட்பாடி ரயில்வே காவல்துறையினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மயக்கம் தெளிந்தபின்பே அந்த பெண் மற்றும் குழந்தையார் என்பது தெரியவரும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!