உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றிதிரிந்தவர்கள் 150 பேர் மீது வழக்குபதிவு மற்றும் 160 இருசக்கர வாகனங்கள் இதுவரை போலீசார் பறிமுதல்

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றிதிரிபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உசிலமபட்டி பகுதியில் 144தடை உத்தரவை மதிக்காமல் தேவையின்றி ஊர் சுற்றிய 150 பேர் மீது போலீசார் இதுவரை வழக்குபதிவு செய்துள்ளனர். அதே போல் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றிதிரிந்த 160 வாகனங்களை இதுவரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உசிலம்பட்டி காவல் நிலையத்தில் மொத்தம் 360 வழக்குபதிவுகள் செய்யப்படுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தேவையின்றி ஊர்சுற்றிய சிறுவர்களுக்கு போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!