கீழக்கரையில் கொரொனா அதிகரித்து வரும் சூழலில் பல் வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதில்லை, பல இடங்களில் கழிவு நீர் ஓடிகொண்டு இருக்கிறது. சரியான முறையில் சுத்தம் செய்ய வருவதில்லை குற்றச்சாட்டு தொடர்கிறது.
மேலும் கீழக்கரையில் மின் கம்பங்கள் பல இடங்களில் உடையும் தருவாயில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர், மக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும், அதே போல் குப்பைகளை அன்றாடாம் எடுக்காமல் பல இடங்களில் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதே போல் பல இடங்களில் கால்வாய்கள் மூடி இல்லாமல் அபாயகரமாக உள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு பொது மக்கள் நலன் கருதி உடனடியாக நகராட்சி ஆணையர், மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கீழக்கரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















You must be logged in to post a comment.