இராமநாதபுரம் :இந்திய அரசியலமைப்பு சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இழிவு படுத்தி பேசிய உள் துறை அமித் ஷாவை கண்டித்தும், அமித் ஷா பதவி விலகக் கோரியும் மண்டபம் ஒன்றிய விசிகவினர் மண்டபம் பேரூரில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் சீ.கோ.ஆறு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், இந்திய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலாளர் சிறுத்தை முத்து வாப்பா, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜபருல்லாகான், மாவட்ட அமைப்பாளர் திருமா ராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தராஜ், பொறுப்பாளர் சீனி ஜலாலுதீன், சேசு, பாம்பன் நகர் செயலாளர் முனியசாமி மற்றும் தங்கவேல் பாண்டியன் கோட்டை ராஜ் அருண் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.