கீழக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகர் அமைப்பாளர் யாசின் தலைமையில், நெய்னா அசாருதீன், இஞ்ஜினியர் பாஸித், ஆரிபின் முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராமசந்திரன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மரினா அசோசியேட் நிறுவனர் கபீர், சிந்தியா ஜோன் நிறுவனர் அப்துல் முஸ்ஸவிர், சர்வதேச மக்கள் உரிமை மீட்பு கழகம் சர்வதேச ஊழல் தடுப்பு விழிபுணவு இயக்கத்தின் மாவட்ட தலைவர் முகம்மது பஹருல் பாயாஸ், கீகீ மார்க்கெட்டிங் யாசர் அரபாத், நியாஸ் மற்றும் இசுலாமிய சனநாயக பேரவை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!