கீழக்கரையில் தொடரும் வெறி நாய் தொல்லை மற்றும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கான விடுதலை சிறுத்தையினர் நகராட்சி ஆணையரிடம் மனு..

கீழக்கரையில் வெறி நாய்கள் நோய் வாய்ப்பட்ட நிலையில் கீழக்கரை முழுவதும் அதிகமாக சுற்றி திரிகிறது,  சில வருடங்களுக்கு முன்பு சாலை தெருவில் சிறுவயது குழந்தையை வெறிநாய் கடித்து இறந்து போனது மற்றும் பலர் பாதிப்புக்குள்ளானார்கள், ஆனால் நிரந்தர தீர்வு இல்லாமல் மீண்டும் வெறிநாய் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு  சொக்கநாதர் கோவில் பின்புறம் ஒரு சிறுமியை கடித்து கத்தியபோது பக்கத்தில் உள்ளவர்கள் நாயை தூரத்தும் முற்பட்ட போது மற்றவர்களையும் கடித்து காயப்படுத்தியுள்ளது. பின்னர் சிறுமி கீழக்கரை அரசு மருத்துவமனை கொண்டு சேர்நக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நகராட்சி துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வலியிறுத்தப்பட்டது.

அதே போல்  பேவர் கல் கீழக்கரை முழுவதும் போடப்பட்டு பல இடங்களில் முறையாக பதிவிடாத காரணங்களால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. கீழக்கரையில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு உண்டாவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும் கீழக்கரைக்கு நிரந்தரமான ஆணையர் நியமிக்க வேண்டும்.

அதே போல் கீழக்கரை  நகராட்சியாக உயர்வு பெற்ற  பிறகும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை, ஆகையால்  நகராட்சி ஆணையர் ய்ய மக்கள் நலன் கருதி சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!