கீழக்கரை அரசு மருத்துவமனையில் அமரர் அறை (Mortuary Room) அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி ஆட்சியரிடம் மனு..

கீழக்கரை தாலுகாவாக மாறிய நிலையில், தினமும் பல நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையில், எதிர்பாராத விதமாக உயிர் இழந்தவர்களின் உடலை பாதுகாக்க எந்த வித வசதியும் இல்லாத சூழலே உள்ளது.  அமரர் அறை என்ற பெயர் பங்கு வைத்த அறையோ குப்பைகளை கொட்டும் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.  சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தவரின் உடலை பாதுகாக்க வழி இல்லாமல் இறந்தவரின் உறவினர்களே உடலை பாதுகாக்க குளுரூட்டும் பெட்டி ஏற்பாடு செய்த அவலமும் நடைபெற்றது.

இது போன்ற அவல நிலை நீங்க கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய  புதிய அமரர் அறை (Mortuary Room) கட்டிதர வேண்டும் என்று கீழக்கரை விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!