சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவனுக்கு பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது விசிக. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்களுக்கு தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் விசிக கோரிக்கை விடுத்தது. மேலும் இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தையும் அணுகியது.
மதிமுக மனு மீதான விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளார் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா.
இதேபோல் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி, அவருக்கு தீப்பெட்டிச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது சின்னம் பானை, இந்தச் சின்னம் நமது உரிமை என்பதில் மிக உறுதியாய் உள்ளோம்,” என்று சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









