மோடி மீண்டும் பிரதமரானால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து. மோடி பிரதமரானால் சிறுபான்மையினருக்கு ஆபத்து, அவர்கள் வழிபாடு தலங்கள் உடைக்கப்படும்!-திருமாவளவன் எச்சரிக்கை..

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அருண் நேரு நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லி செல்ல வேண்டும். இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. வாழ்வுரிமைக்கான போர். இந்தியா கூட்டணியை உருவாக்க ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை நாடு அறியும்.

முதல்வர் முக ஸ்டாலின் அதிமுகவை எதிராகயாக கொள்ளாமல் அகில இந்திய அளவில் பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சியினரை சந்தித்து பேசி கூட்டணியை உருவாக்கினார். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஸ்டாலினின் முயற்சி தான் இந்தியாக் கூட்டணி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரியை கன்னியாகுமரியில் தொடங்கிய போதும், அதனை முடித்தப் போதும் உடன் இருந்தவர் முதல்வர் மு‌க ஸ்டாலின். 10 ஆண்டு மோடி ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. டீ, கேஸ், அரிசி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளது. மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதால் தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார் ஆனால் இன்று கோடிக்கணக்கானோர் வேலையின்றி இருக்கிறார்கள். கருப்பு பணத்தை மீட்டு 15 இலட்சம் கொடுப்பேன் என்றார் ஆனால் எதுவும் செய்யவில்லை. கலைஞர் ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றலாம் என மோடி திட்டமிட்டு பல முறை‌ தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்.

மோடியின் ஆட்சியில் நாடு வளரவில்லை. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதானி மற்றும் அம்பானி மட்டுமே வளர்ச்சிடைந்துள்ளனர். ஒரு சாதாரண ஒப்பந்ததாராக இருந்த அதானி இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில் 4 வதாக இருக்கிறார். மோடி பிரதமரானால் ரேசன் கடை இருக்காது, இட ஒதுக்கீடுகள் இருக்காது, 100 நாள்‌ வேலைவாய்ப்புத்திட்டம் இருக்காது. சாதி – மத சண்டைகள்‌ தான் இருக்கும்.‌

அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஏவி தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 6500 கோடி ரூபாயை பணம் பறித்துள்ளனர் பாஜக. இவர்களை அகற்றத்தான் ராகுல்- ஸ்டாலின், மம்தா அரவிந்த் கெஜ்ரிவால் கைக்கொத்துள்ளனர். மோடி மீண்டும் பிரதமரானால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து. மோடி பிரதமரானால் சிறுபான்மையினருக்கு ஆபத்து, அவர்கள் வழிபாடு தலங்கள் உடைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். ஏவல் ஆட்கள் ஒடுக்கப்பட்டோரிடம் வருவார்கள் அவர்களை கலற்றி அடியுங்கள்.

இந்த தேர்தல் அம்பேத்கர் வாரிசுகளுக்கும், சாவர்க்கர் தொண்டர்களுக்கும் இடையே நடக்கும் போர். அண்ணாமலையை வரச்சொல்லுங்க விவாதிப்போம். நான் தேவையில்லை கட்சியின் கிட்டுவே போதும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தான் தனது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அம்பேத்கர். பாஜக வை எதிர்காமல் இருந்திருந்தால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்‌. பொன்முடியின் பதவிக்கு ஆபத்து வந்திருக்காது. பல்வேறு நெருக்கடிகள் இருந்தும் கலைஞரிடம் அரசியல் கற்ற அரசியல் வாரிசு முக ஸ்டாலின் அதனை தவிர்த்து சமூக நீதிக்காக விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார்.

அருண் நேருவும் அவரது தந்தையின் வழியில் மக்கள் பணியாற்ற வந்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுகளை மாநில அரசின் முடிவிற்கே விடப்படும் என்றது, பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தும். இந்த தேர்தல் அறிக்கைதான் இந்தியக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர். பெண்களுக்கு உரிமைப்பயணம், உரிமைத் தொகைத் திட்டம் போன்றவற்றை பார்த்து அதிமுக பயப்படுகிறது என்றார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!