பாராளுமன்ற தேர்தல் குறித்து ரஜினியின் அறிவிபபு அவரது தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தற்போது அறிக்கை விடுத்துள்ளார் எனவும் இந்த அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கதையும் ஏற்படுத்தாது என உசிலம்பட்டியில் திருமாவளவன் பேட்டி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் வேல்முருகன் – அகிலா இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணமக்களுக்கு தாலி எடுத்துகொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பாராளுமன்ற தேர்தல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள அறிக்கை ஏற்கனவே அறிவித்த நிலைப்பாடுதான் அவரது தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தற்போது அறிக்கை விடுத்துள்ளார் எனவும் இந்த அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கதையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். மேலும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் அதில் மாற்றம் இல்லை திமுகவில் மற்ற கட்சிகள் கூட்டணி வைப்பது குறித்து திமுக தலைமைதான் முடிவு செய்யும் அதில் எனது கருத்து ஏதும் இல்லை எனவும் காஷ்மீர் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாது மத்திய அரசின் அணுகுமுறை தோல்வி அடைந்துள்ளது மேலும் கடுமையான பாதுகாப்பு நிறைந்த பகுதயில் 350 கிலோ வெடிமருந்தை வைத்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது புலனாய்வுத்துறை எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது எனவும் மத்திய அரசின் ஆட்சி நிர்வாகம் எந்த அளவிற்கு பலவீணமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த தாக்குதல் குறித்து எதிர்வினையாக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் துணை நிற்ப்போம் என அனைத்து கட்சியும் அறிவித்துள்ளது போல நாங்களும் அதற்கு உறுதுணையாக இருப்போம் என பேட்டியளித்தார்.
பேட்டி: திருமாவளவன் ( விசிக தலைவர் )

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









