விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு திருவாடணை ஒன்றியம் ஓரிக்கோட்டையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் கருணை இல்லத்தில் மதிய நேர உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஒன்றிய துணைச் செயலாளர் நா. குமார் ஒருங்கிணைப்பில், திருவாடணை தொகுதிச் செயலாளர் பழனிக்குமார் தலைமையிலும், ஒன்றியச் செயலாளர் ராதாக்கிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக், மாவட்டப் பொருளாளர் விடுதலைச் சேகரன் , மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சத்தியராசு வளவன், இராமநாதபுரம் தொகுதிச் செயலாளர் த. அற்புதக்குமார் , கிறித்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் வேதராஜ், சிறுத்தைகள் முகில்தம் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.





















You must be logged in to post a comment.