விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை..

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!