நிலக்கோட்டை தாலுகா கிராம நிர்வாக அலுவலர் துணை ஆட்சியராக தேர்வு! பணி விடுவிப்பு ஆணை வழங்கி வருவாய் கோட்டாட்சியர் கௌரவிப்பு..
நிலக்கோட்டை வட்டம் செங்கட்டாம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அனிதா நிலக்கோட்டை தாலுகா சிலுக்கவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார் இவர் க்ரூப் 1 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 25 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கரங்களால் துணை ஆட்சியர் பணி நியமன ஆணை பெற்றார்.
இதைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் அனிதாவிற்கு கிராம நிர்வாக அலுவலர் பணி விடுவிப்பு ஆணை வழங்கினார்.
மேலும் துணை ஆட்சியராக தேர்வாணதற்கு வாழ்த்துக்கள் கூறி பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமைய்யா ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.