கமுதியில் லஞ்சம் கேட்ட VAO, ரசாயனம் தடவிய ரூ.4,000-உடன் கையும் களவுமாக சிக்கினார்!
இராமநாதபுரம்:
வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த ஒருவரிடம், கமுதி தாலுகா தவசிக்குறிச்சி VAO பிரேமானந்தன் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நேராக இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசை அணுகினார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4,000-ஐ ஏற்பாடு செய்தனர்.
VAO-வின் உத்தரவுப்படி, அந்த பணத்தை கமுதியை சேர்ந்த S.P. டிரேடர்ஸ் உரிமையாளர் வடிவேல் பெற்றுக்கொண்டார். அதே நேரத்தில் புலனாய்வுக் குழுவினர் திடீர் முறையில் விரைந்து வந்து, வடிவேலும் VAO பிரேமானந்தனும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
இருவர்மீதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.