தொடர்ந்து சாதனை படைத்து வரும் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலை பள்ளி…

வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி +2 தேர்வு முடிவைப்போல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு அரசு மேல் நிலைப் பள்ளி 2018-19 கல்வியாண்டு பிளஸ் 2 தேர்வில் நூறு 100 % சதவீத தேர்ச்சியும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வது இடத்தையும் பெற்றது. இன்று (29/04/2019)  வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளது.

+2 மற்றும் 10ஆம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சிக்கு அயராது பாடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும் பணிபுரியும் ஆசிரிய பெருந்தகைளுக்கும் இந்தாண்டு 100 % தேர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என வணணாங்குண்டு சுற்று வட்டார் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் வண்ணாங்குண்டு இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த அரசு பள்ளியின் சாதனை தனியார் பள்ளி மட்டும்தான் சாதனை படைக்க இயன்றவர்கள் என்ற கருத்தை தகர்த்தெறிந்து நல்ல ஆசிரியர்களும், கற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை இருந்தால் சாதனை படைக்க தடையில்லை என்பதை மீண்டும் நிரூபணம் செய்துள்ளார்கள்.

துபாயிலிருந்து பாசித்..

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!