மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பள்ளிக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை கொடுத்த மதுரை ஆயி என்ற பூரணம் கலந்து கொண்டு பேசும்போது பெண்களை மதித்தல், பெண் கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தல், குழந்தை திருமணம், குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார். மேலும் மாணவர்கள் சமூகத்தை நேசிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குணசுந்தரி, கவுன்சிலர் சிவகுரு சேகர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி மீராதேவி, வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் நன்றியுரை கூறினார். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.