ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் ராமையன்தோப்பு மற்றும் அதனை ஒட்டியுள்ள பாலாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது ,இந்த பகுதியில் மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக மணல் எடுப்பதுடன் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு
உள்ள இடங்களில் மணலை அள்ளி சென்று விடுகின்றனர் இதனால் அங்குள்ள கிணறுகளும், டேங்குகள், பைப்புக்களும் உடைந்து கிடக்கிறது, இதனால் மக்களுக்கு குடிநீரை முறையாக சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது, எனவே உடனடியாக தடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாணியம்பாடி தாசில்தாரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் ஊராட்சி நிர்வாகமும், பொதுமக்களும் இணைந்து பாலாற்று பகுதியில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை ஜேசிபி மூலம் மூடி வருகின்றனர், இனியாவது வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் ஆதார பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்…
கே.எம்.வாரியார்





You must be logged in to post a comment.