வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை சாலை அருகே உள்ள வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் அருகில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். விழுந்த அவரை அருகிலிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர் மீட்டு முதலுதவி செய்து கொண்டிருந்தபோது வாணியம்பாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளைப் பார்வையிடுவதற்காக சாலையில் வந்து கொண்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் திடீரென வாகனத்தை நிறுத்தி அங்கு சென்று மயங்கி விழுந்து வரை காவல் கண்காணிப்பாளர் என்பதை மறந்து தான் ஒரு மருத்துவர் என்பதை உணர்த்தும் வகையில் முதியவருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தான் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்பதை மறந்து தான் மருத்துவர் என்பதை உணர்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!