வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாநகர கலந்தாய்வு கூட்டம்‌.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாநகர கலந்தாய்வு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.ஆனந்த், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார். செய்தி தொடர்பாளர் முருகேசன். இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த கூட்டத்தில், வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க
வேண்டும். இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதும், மாவட்ட நிர்வாகத்தை அழைக்கும் விதமாகவும் அவர் சிறப்புரையாற்ற உள்ளார்.இதில் முரசொலி எம்.பி., சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மணிமாறன். போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஆணையர் கண்ணன், வணிகவரித்துறை உதவியாளர், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர். தொழிலாளர் நலத்துறை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.. வணிகர் சங்க பேரமைப்பு அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
வருகின்ற மேமாதம் 5-ந்தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மதுராந்தகம் அருகில் நடைப்பெறும்மாநாட்டில் தஞ்சையில் இருந்து 1000 நபர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டதுணைசெயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட துணை தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.கே. சிதம்பரம், தேவதாஸ், இளைஞரணி செயலாளர் முத்துமணி, மாவட்ட துணை அமைப்பாளர் ஜான், மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலாளர் மோகன். செயற்குழு ரெங்கசாமி. மாவட்ட இணை செயலாளர்கள் மணிகண்டன். ஜீவானந்தம், இளைஞரணி சிவபாலன், இளம் தொழில்முனைவோர் கிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!