திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது தொடர்ந்து நடைபெற்றபொதுக்குழு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்ரமராஜா மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பொது குழுவில் பழனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவராக ஜேபி சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மாநில தலைவர் விக்கிரம ராஜா மற்றும் பழனி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநில கௌரவத் தலைவர் ஹரிஹர முத்து மாநில இணைச் செயலாளர் கந்த விலாஸ் பாஸ்கரன் மண்டல தலைவர் கிருபாகரன் மாவட்ட கௌவுரவத் தலைவர் கண்ணுச்சாமி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் கார்த்திகேயன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ் விடுதி அசோசியேசன் ரம்யா கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி பொறுப்பாளர் நியாஸ் மற்றும் பழனி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

You must be logged in to post a comment.