திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு!! கொடைரோடு நிலையத்தில் இறங்கிய பயணிகள்..
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தபோது கதவுகள் திறக்கப்படாமல் பழுதானதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகள் இறங்க முடியவில்லை.
இதை தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரயிலின் அபாய சங்கலியை அழுத்தி பயணிகள் ரயிலை நிறுத்தினாலும் ரயில் நீண்ட தூரம் சென்று விட்டதால் அங்கு வந்த பயண சீட்டு பரிசோதகர் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறி, நிறுத்தம் இல்லாத கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்றது
இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே நிர்வாகம் பயணிகளை ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர்.
You must be logged in to post a comment.