பூமியில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக வல்லநாடு மலையில் பள்ளிச் சிறுவர், சிறுமியர்களால் விதைப்பந்துகளை தன்னார்வத்துடன் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இயற்கை மற்றும் சமூக நல ஆர்வலர்கள், கல்வித்துறை, வனத்துறை, காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பசுமையை பாதுகாக்கும் பணியில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் காலாண்டு விடுமுறையில் தாம் செய்த விதைப் பந்துகளுடன் வந்திருந்தனர். 21,000 விதைப்பந்துகளை இந்த மாணவ மாணவியர் சுயவிருப்பத்துடன் செய்திருந்தனர். வல்லநாடு அருகிலுள்ள மணக்கரை மலையில் இந்த பசுமை பொங்கும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை ராணி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன். முன்னிலை வகித்தார். விதைப்பந்து வீசும் இந்நிகழ்வில் தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வனச்சரகர் பிருந்தா நிகழ்வை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தர், வரம் அமைப்பின் நாகராஜன், ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன், சீனிவாசன் அறக்கட்டளை முருகன், விஜயகுமார், பாபு, முன்னாள் பேரூராட்சி தலைவர் காந்த சிவசுப்பு, தியாகச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். விதைப்பந்துகளை தயாரித்த 250 மாணவ மாணவியருக்கும் டிரஸ்ட் சான்றிதழ்களை தினமலர் தினேஷ் வழங்கி வாழ்த்தினார்.
அதிக அளவில் விதைப்பந்துகளை தயாரித்த ராம்சரண், முருகன், சுபஸ்ரீ, கெளதம் கண்ணன் ஆகியோருக்கு சான்றிதழ்களை சாம்பவர் வடகரை ஹரிபிரியாணி உரிமையாளர் ஹரிஹர செல்வன் மற்றும் சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் இணைந்து வழங்கினர். ஒருலட்சம் மர விதைகள் கொண்ட 21,000 விதைப்பந்துகள் மலையின் மடியில் வீசப்பட்டன. ஆசிரியர்கள் பிச்சம்மாள், தங்கராணி, சாந்தி, சசி, ஜாஸ்மின், பாத்திமா, ராஜலட்சுமி, காயத்திரி, முத்துலட்சுமி, பொன்முத்து ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மணக்கரை பஞ்சாயத்து தலைவர் சீனிப்பாண்டியன், வனவர் அசோக்குமார், வெங்கடாச்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மழை வளம் அதிகரிக்க விடுமுறையை வீணடிக்காமல் விதைப்பந்துகளை தயார் செய்த பசுமை சிந்தனை மற்றும் தேசப்பற்று மிக்க பள்ளி மாணவ மாணவிகளை திருமாறன், தினேஷ், வரம் நாகராஜ், வரம் ஜவஹர், ஹரி ஆகியோர் வாழ்த்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.