இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி 98ம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா ..

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி 98ம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றன. இவ்விழாவை பள்ளி மேலாண்மை குழு கிராம கல்வி குழு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாணவ மாணவியர் ஆசிரியர்கள் இணைந்து நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயந்தி, மருத்துவர் பாரூக், எம்.எஸ் கே தொடக்கப் பள்ளி ஆசிரியர் உமாமகேஸ்வரி, நூலகர் அன்புச்செல்வி, போஸ்ட் மாஸ்டர் சாந்த பிரியன், அழகப்பா மாலை நேர கல்லூரி இயக்குநர் பிருந்தா, தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி, ஆசிரியர்கள் தௌலத் நிஷா பேகம், இராமேஸ்வரி பா மா விஜய மாரி, மீனா, முத்துலெட்சுமி என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கல்வியிலும், நடனத்திலும். நாடகத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!